ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி
2022-09-06@ 00:02:04

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக தீர்த்து வைப்பது எங்கள் கடமை. ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 34, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் 5, தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை பள்ளிகள் 1, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் 10 என மொத்தம் 393 பேருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றி அமைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்தான். ஆசிரியர்கள் ஏங்கினால், வகுப்பறைகள் தூங்கும் என்று அண்ணா சொன்னார். ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு தேவை சுதந்திரம். அதை கொடுத்துவிட்டால் அவர்கள் மாணவர்களை எப்படி வளர்த்து எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அன்றைய ஆசிரியர்கள் கடுமையாக தண்டிக்க முடிந்த காலம் இருந்தது. இன்று அப்படி அல்ல. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு வேறுபட்டது. அப்படிப் பட்டவர்களுக்கு வழங்கும் விருது, தகுதியானதுதான். ஆசிரியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் கோரிக்கை படிப்படியாக தீர்த்து வைப்பது எங்கள் கடமை என்று பேசினார்.
* பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குர் தேவை
தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, டிபிஐ வளாகத்துக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் என்னைத்தான் வந்து சந்திக்கின்றனர். அப்போது, ஆணையரை பார்க்க முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர். எனவே பள்ளிக் கல்வித்துறையில் முன்பு இருந்தது போல, பள்ளிக் கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தெரிவித்தனர். அடுத்தபடியாக, ஆசிரியர்களுக்கு அதிக அளவில் எழுத்து வேலை, புள்ளி விவரம் எடுக்கும் பணிதான் கொடுக்கப்படுகிறது. அதனால் அதைதவிர்த்து கற்றல் பணிக்கு நேரம் ஒதுக்கவும் கோரிக்கையாக வைத்து இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் தான் அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் பள்ளிக் கல்வி அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:
Teachers' demands School Education Minister Mahesh ஆசிரியர்களின் கோரிக்கைகள் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ்மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!