சீனா, ஆப்கானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்
2022-09-05@ 19:07:38

அசதாபாத்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணம் நோர்கல் மாவட்டம் மசார் தாரா பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இயற்கை பேரிடர் மேலாண்மை மாகாணத் தலைவர் எஹ்சானுல்லா எஹ்சான் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் மசார் தாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. முதற்கட்ட விசாரணையில் 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் கிடைந்துள்ளது. மொத்த சேதங்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் உணரப்பட்டது’ என்றார்.
அதேபோல் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பாதிப்புகள், உயிர்சேதம் குறித்த விபரங்கள் தெரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, லூடிங்கிற்கு அருகிலுள்ள யான் நகரில் 4.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
பெரு நாட்டில் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தல்
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கு: இலங்கை மாஜி அதிபரிடம் போலீஸ் விசாரணை
தோண்ட தோண்ட சடலங்கள்!: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது..!!
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் பலி
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!