தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-09-05@ 01:58:50

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும்.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.
மேலும் செய்திகள்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!