நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
2022-09-03@ 16:41:14

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் நாள் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணைய வழி வாயிலாக விண்ணமங்கள் பெறப்பட்ட நிலையில்., 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்காக B.Ed இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். இந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!