SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை பெசன்ட் நகரில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிப்பு

2022-09-03@ 10:37:06

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை “Car-Free Sunday” நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 8 வாரங்கள் அதாவது 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி,

1.    7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

2.    16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.

3.    3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்

4.    4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்