மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு மருத்துவ முகாம்
2022-09-03@ 01:48:12

கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம், குத்தினூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மாடம்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அருகில் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி, தலைவலி, மூச்சுத்திணறல், எடை குறைதல், மாலைநேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் உள்ள 35க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், தமிழக அரசின் நடமாடும் மருத்துவ குழு வாகனத்தில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரேவும் எடுக்கப்பட்டது. எழுச்சூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு டாக்டர்கள், காசநோய் அறிகுறிகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அரசு வழங்கும் உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!