திடீர் உடல்நலக்குறைவு தஞ்சை மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதி
2022-09-03@ 01:26:22

தஞ்சாவூர்: திடீர் உடல்நலக்குறைவால் தஞ்சாவூர் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுன்தினம் இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன், அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு ஓட்டல் அறைக்கு வந்தார். அப்போது அங்கு அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், உடல்நலக்குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!