தேர்தல் முறைகேடு வழக்கு சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை
2022-09-03@ 00:20:47

பாங்காக்: தேர்தல் முறைகேடு வழக்கில் மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில், இந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட ஆட்சியை கடந்த பிப்வரியில் ராணுவம் கைப்பற்றியது. பிறகு, சூகியின் மீது ஏராளமான ஊழல் வழக்குகளை அது தொடர்ந்தது. இதில், தகவல் தொடர்பு சாதனங்கள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது, தேசத்துரோக வழக்கு, அரசு நிலத்தை சந்தை விலையை விட குறைந்த வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு வழங்கிய நன்கொடையில் வீடு கட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தேர்தல் முறைகேட்டிலும் ஈடுபட்டதாக புதிய குற்றச்சாட்டை ராணுவம் முன் வைத்தது. இந்த வழக்கில் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இத்துடன் சேர்த்து அவருடைய சிறை தண்டனை காலம் 20 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை: உகாண்டா அரசு அதிரடி
அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து
மேகாலயா சட்டப்பேரவையில் இந்தியில் பேசிய கவர்னருக்கு எதிர்ப்பு: 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அதிபர் விக்ரமசிங்கே வலியுறுத்தல்
ஜப்பான், சீன தலைவர்கள் உக்ரைன், ரஷ்யாவுக்கு பயணம்
சிறந்த கலை சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது: அமெரிக்க அதிபர் வழங்கினார்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!