SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

யுஎஸ் ஓபன் டென்னிஸ் ரத்தம் சிந்தி வென்ற ரபேல்: இகா முன்னேற்றம்

2022-09-03@ 00:20:25

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். 2வது சுற்றில்  இத்தாலி வீரர் பேபியோ பாக்னினியுடன் (35 வயது, 60வது ரேங்க்) மோதிய நடால் (36 வயது, 3வது ரேங்க்), 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டிலும் அவர் 2-4 என பின்தங்கியதுடன் தனது டென்னிஸ் மட்டையே மூக்கில் பபலமாகத் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் ஒழுக ஆரம்பித்தது. களத்தில் சரிந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஆட்டமும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், அபாரமாக விளையாடி பாக்னியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த நடால் 2-6, 6-4, 6-2, 6-1  என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 43 நிமிடங்களுக்கு நீடித்தது. நடப்பு சீசனில் இதுவரை களமிறங்கிய கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்  ஒரு ஆட்டத்தில் கூட அவர் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்னினிக்கு எதிராக பெற்ற வெற்றியால், ஆண்டு இறுதி ஏடிபி பைனல்ஸ் தொடரில் விளையாட முதல் வீரராக தகுதி பெற்றார். பாக்னினியுடன் 18 முறை மோதியுள்ளதில் நடால் 14 வெற்றிகளை வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த நடால், விம்பிள்டன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய நிலையில் துரதிர்ஷ்டவசமாக வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலக நேரிட்டது. அடுத்து 3வது சுற்றில்  பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு காஸ்கே (36 வயது, 91வது ரேங்க்) உடன் நடால் மோதுகிறார்.

முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), யானிக் சின்னர் (இத்தாலி), பிரான்சஸ் டியபோ (அமெரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), டீகோ ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா), கேமரான் நோரி (இங்கிலாந்து), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தினார். கரோலினா பிளிஸ்கோவா, பெத்ரா குவித்தோவா (செக்.), டேனியலி கோலின்ஸ், ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), அரினா சபலென்க, விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

* போபண்ணா ஏமாற்றம்
யுஎஸ் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நெதர்லாந்தின் மேத்யூ மிடில்கூப்புடன் இணைந்து களமிறங்கிய இந்திய வீரர் ரோகன் போபண்ணா 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் லாரென்சோ சொனேகோ - ஆண்ட்ரியா வவஸோரி ஜோடியிடம் தோற்று வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 6வது ரேங்க் ஜோடியாக சீனாவின் ஸவோக்சான் யாங்குடன் இணைந்து விளையாடிய அவர் 5-7, 5-7 என்ற நேர் செட்களில் கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி - மேக்ஸ் புர்செல் (ஆஸி.) ஜோடியிடம் போராடி தோற்றார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்