SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் நடால், சபலென்கா

2022-09-02@ 14:45:42

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2வது சுற்று போட்டிகள் இன்று நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில்  6ம் நிலை வீராங்கனையான பெலாரசின்  24 வயதான அரினா சபலென்கா 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் 37 வயதான எஸ்டோனியாகையா கனேபியை போராடி வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். செக் குடியரசின் 30 வயது கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில், சகநாட்டைச் சேர்ந்த மேரிபவுஸ்கோவாவை சாய்த்தார்.

அமெரிக்காவின் 28 வயதான டேனியல் காலின்ஸ், 6-2, 7-5 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவையும், 28 வயது ஸ்பெயினின் முகுருசா, 6-0, 6-4 என செக்குடியரசின் லிண்டாவையும், பிரான்சின் கிளாராபுரல் 6-4, 4-6, 6-4 என  பெல்ஜியத்தின் அலிசன் வானையும் வீழ்த்தினர். முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சையும், குரோஷியாவின் பெட்ரா மார்டிக், 6-7, 6-1, 6-2 என 4ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவையும் வென்றனர்.

ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னியுடன் இன்று மோதினார். இதில் முதல் செட்டை இழந்த 2-6 என இழந்த நடால், அடுத்த 3 செட்டை 6-4,6-2, 6-1 என கைப்பற்றி 3ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்