உடல் நலக்குறைவால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி: ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம் என ட்வீட்
2022-09-02@ 11:37:51

தஞ்சை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் தஞ்சைக்கு வந்திருந்தார். நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
டிடிவி. தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அமமுக தொண்டர்களிடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை திருச்சியில் அமமுக கட்சியின் சார்பில் திருச்சியில் மாவட்ட அளவில் கூட்டம் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி துறையை சேர்ந்த பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு 50 சதவீதம் மானியம்
சிவாயம் வில்கல்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலம்-வெற்றி பெற்ற மாடுகளுக்கு தேவராட்டத்துடன் மரியாதை
கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் கொடைக்கானல் வனப்பகுதியில் 10 லட்சம் சோலை மரக்கன்றுகள் நட்டு வனத்துறை சாதனை
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!