நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி
2022-09-02@ 00:31:06

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஐ.கருப்பையா, பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தின் நிகர வருமானம் குறைந்துள்ளதற்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது. என்னை மிரட்டி பார்த்தால், இப்படி தான் பதில் இருக்கும். மிரட்டி பார்க்க நாங்கள் வரவில்லை.
நான் தன்மானம் இருக்கும் அரசியல்வாதி. அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் வீட்டை, விட்டு வெளியே வந்து இதனை செய்ய முடியுமா, என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு இயேசு அல்ல. என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்றார்.
மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!