தூர்தர்ஷனில் அனைத்து ெமாழியிலும் கட்டபொம்மன், பூலித்தேவன் வேலுநாச்சியார் வரலாறு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
2022-09-02@ 00:18:07

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அளித்த பேட்டி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகங்களை தொடர்ந்து ஒன்றிய அரசு போற்றி வருகிறது. அவர்களை நினைவு கூரும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. நாட்டில் 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்புகிறோம்.
இதில் தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் போன்றவருடைய வாழ்க்கை வரலாறும் இடம் பெறுகிறது. இது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. நாடு 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் நிலையில், நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
மேலும் செய்திகள்
திருவாரூர் அருகே பயங்கரம்: விசி பிரமுகர் வெட்டிக்கொலை.! பாஜ பிரமுகர் உள்பட 6 பேர் கைது
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு
ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி-நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!