யுஎஸ் ஓபன் டென்னிஸ் மீண்டும் செரீனா வேகம்: நெ.2 வீராங்கனை அனெட்டை வீழ்த்தினார்
2022-09-02@ 00:04:22

நியூயார்க்: சர்வதேச போட்டிகளில் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெற உள்ள செரீனா வில்லியம்ஸ் திடீர் வேகம் பெற்று, உலகின் 2ம்நிலை வீராங்கனை அனெட் கொன்டவியட்டை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது.செரீனா வில்லியம்ஸ்(41வயது , 605வது ரேங்க்) 2வது சுற்றில் உலகின் 2ம்நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கொன்டவியட்(26வயது) உடன் மோதினார். கடந்த சில போட்டிகளாக தட்டு தடுமாறி விளையாடி வருவதால் ஓய்வை அறிவித்துள்ள செரீனாவை எளிதில் அனெட் வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து.
ஆனால் முதல் செட்டில் அனெட் கடுமையாக போராடியும் செரீனா தான் அதனை 7-6(7-4) என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த 2 செட்களையும் இருவரும் தலா 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஆளுக்கொரு செட்டை வசப்படுத்தினர். அதனால் 2மணி 27 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை செரீனா 2-1 என்ற செட்களில் அனெட்டை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். யுஎஸ் ஓபனில் கடந்த முறை பைனல் வரை முன்னேறிய லெய்லா பெர்னாண்டஸ்(கனடா), முன்னணி வீராங்கனைகளான மரியா சாக்ரி(கிரீஸ்) பார்போரா கிரரெஜ்சிகோவா(செக் குடியரசு) ஆகியோரும் 2வது சுற்றில் தோல்வியை சந்தித்தனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நெம்பர் ஒன் வீரர் டானில் மெத்வதேவ்(ரஷ்யா), நிக் கிர்ஜியோஸ்(ஆஸி), கஸ்பர் ரவுட்(நார்வே), ஆன்டி மர்ரே(இங்கிலாந்து) ஆகியோர் 3வது சுற்றில் விளையாட உள்ளனர்.
Tags:
US Open Tennis Serena Pace No. 2 seed beats Annette யுஎஸ் ஓபன் டென்னிஸ் செரீனா வேகம் நெ.2 வீராங்கனை அனெட்டை வீழ்த்தினார்மேலும் செய்திகள்
கைல் மேயர்ஸ் 73 ரன் விளாசல் லக்னோ ரன் குவிப்பு
மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்
இன்னும் 20 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி
மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை
ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு
வண்ணமயமான தொடக்க விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!