புழல், செம்பரம்பாக்கம் ஏரி 90 சதவீதம் நிரம்பியது
2022-09-01@ 17:22:08

சென்னை: சென்னை அருகே உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் 600 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்கள் குடிநீருக்காக 315 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இது 18.57 சதவீதம் ஆகும். புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3002 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
நீர்வரத்து 256 கன அடியாக உள்ளது. 205 கன அடி தண்ணீர், சென்னை மக்களின் குடிநீருக்காகவெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 90.97 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 60 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக 176 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 89.69 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் 12.21 சதவீதம் தண்ணீர் உள்ளது. தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதாலும் 40 கன அடி நீர் வருவதாலும் 30 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!