SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் விக்ரம் நடித்து நாளை வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை; ஐகோர்ட் உத்தரவு

2022-08-30@ 02:19:27

சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ம் தேதி (நாளை) உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள  சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில்  வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது.  அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டுதவம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்