11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்: ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
2022-08-29@ 01:41:07

சென்னை: சென்னையில் திட்டமிட்டப்படி வருகிற 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறித்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.முனியாண்டி வெளியிட்ட அறிக்கை:சட்டத்திற்கு புறம்பாக மறைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
பட்டியல் இனத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் குறிப்பாக அனைத்து பெண் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை மாநில நிதி குழு மானியம் ஜீரோ பேலன்ஸ் இல்லாமல் 6வது நிதிகுழு மானிய அடிப்படையில் மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். 100 நாள் பணி திட்டத்தில் வேலைகளுக்கான ஓர்க் ஆர்டர்களை ஊராட்சி மன்ற தலைவர்களே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செயல் அலுவலர் தகுதிக்கான மாத ஊதியம் ரூ30,000 ஆயிரமும், ஓய்வூதியமாக மாதம் ரூ.10.000 ஆயிரமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகமும் கிராம சபையும் சுதந்திரமாக தீர்மானங்கள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!