உள்நாட்டில், வெளிநாடுகளில் குஜராத் பெயரை கெடுக்க சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
2022-08-29@ 01:27:39

புஜ்: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க சதிகள் நடந்தன,’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2வது நாளான நேற்று கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதிக்கு சென்றார்.
2001ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13,000 பேர் பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 470 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட நினைவிடத்தை அவர் திறந்து வைத்தார்.நிறைவடைந்த பல்வேறு நீர்ப்பாசன, குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த மோடி, ரூ.4,400 கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, நினைவிட திறப்பு விழாவுக்கு 3 கிமீ தூரம் வாகன பேரணியாக வந்த அவரை, சாலையின் இருபுறமும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய மோடி, ‘‘உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க பல்வேறு சதிகள் நடந்தன. இம்மாநிலத்திற்கு எந்த முதலீடும் கிடைக்காமல் செய்ய, முயற்சிகள் நடந்தன. ஆனால், வளர்ச்சியின் புதிய பாதையை குஜராத் தேர்வு செய்தது. 2001 பூகம்பத்தால் கட்ச் மாவட்டம் பேரழிவை சந்தித்தது. இதன் மறுசீரமைப்புக்காக கடுமையாக உழைத்தோம். பூகம்பத்திற்குப் பிறகு கட்ச் பகுதியால் மீள முடியாது என சொன்னார்கள். ஆனால், மக்கள் அதை மாற்றிக் காட்டி விட்டனர். தற்போது இந்தியாவில் சில குறைகளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!