SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்காவுக்கு இங்கிலாந்து பதிலடி

2022-08-29@ 01:23:08

மான்செஸ்டர்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் 103 ரன், போக்ஸ் 113 ரன் விளாசினர்.

இதையடுத்து, 264 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 85.1 ஓவரில் 179 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன் 4, ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் 2, பிராடு 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் செப். 8ம் தேதி தொடங்குகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்