எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமனுக்கு மானுடத்தின் பெருமை விருது கோலாலம்பூரில் வழங்கப்பட்டது
2022-08-27@ 02:19:39

சென்னை: மானுடத்தின் பெருமை விருது எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனுக்கு கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. டேக் கேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குடிமக்கள் கவுரவமான, மகிழ்ச்சி நிறைந்த, நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்கான சேவைகளை ஆற்றி வருகிறது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் மானுட வளர்ச்சிக்காகத் தன்னலம் கருதாது சேவை செய்து வரும் பிரமுகர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மானுடத்தின் பெருமை என்ற பெயரில் விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான மானுடத்தின் பெருமை விருது, எழும்பூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் பரந்தாமன், தனது தொகுதி மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள காந்தி இர்வின் சாலையில் வீடு இல்லாமல் நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு, தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதங்களுக்குள்ளாகவே, தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில், அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க்-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கி குடியமர்த்தி, அவர்களின் துயரத்தை போக்கியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இந்த விருது நேற்று மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில், ராயல் சுலான் எனுமிடத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்