ஆவடி அருகே வீட்டில் பாலியல் தொழில்; புரோக்கர் கைது இளம்பெண்கள் மீட்பு
2022-08-27@ 01:37:07

ஆவடி: ஆவடி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டு மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் மல்லிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 இளம் பெண்களை மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து 2 இளம்பெண்களை மீட்டு மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43) என்ற பாலியல் புரோக்கரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்து 2 இளம்பெண்களை மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!