ஆரணி பேரூராட்சியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்; துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு
2022-08-27@ 01:19:04

பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல், இருந்து வரும் பிரச்னைகள் குறித்து உடனடியாக பட்டியல் அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, பொன்னேரி தொகுதியில் உள்ள ஆரணி பேரூராட்சியில், தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, நீண்ட காலமாக பேருந்துகள் சாலையிலும், பஜாரிலும் நின்று இயக்கப்படுவதால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.
ஆரணியில் 24 மணி நேரமும் மருத்துவருடன் கூடிய மருத்துவமனை இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் பிரசனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கேட்டுக் கொண்டனர். ஆரணி பேரூராட்சியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளபோதும், பேருந்து நிலையம், 24 மணி நேர மருத்துவமனை, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்கள் கருத்துக்களை கேட்ட எம்எல்ஏ துரை.சந்திரசேகர் முதல்வரே நேரடியாக அனைத்து தொகுதி பிரச்னைகளை கேட்டுள்ளதால் விரைவில் திட்டங்கள் நிறைவேறும் என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!