வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.!
2022-08-25@ 17:59:02

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.08.2022) ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகளில் கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற பிற துறை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வ அடிப்படையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் <https://www.nvsp.in/> இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும், வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்பொழுது அவரின் கைபேசியில் உள்ள Garuda App மூலமாவும் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) திரு.ஜி.குலாம் ஜீலானி பாபா, மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!