ஹோண்டா ஆக்டிவா பிரீமியம் எடிஷன்
2022-08-25@ 15:22:27

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா பிரீமியம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.75,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே சந்தையில் உள்ள டிஎல்எக்ஸ் மாடலை விட ரூ.1,000, ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ.3,000 அதிகம். அழகுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்தான் இதற்கு காரணம். சக்கரங்கள், லோகோ உள்ளிட்ட இடங்களில் தங்க நிற பூச்சு இடம்பெற்றுள்ளது.
ஸ்கூட்டரின் உட்புறம் பிரவுன் நிறத்திலும், வெளிப்புறத்தில் நீலம், பச்சை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இன்ஜினில் மாற்றம் இல்லை. இதற்கு முந்தைய வேரியண்ட்களில் உள்ள 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் இதிலும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும் 8.84 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
மேலும் செய்திகள்
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 53
புதிய வெர்னா
காவாசாக்கி எலிமினேட்டர் 400
சிட்ரான் இ-சி3 எலக்ட்ரிக் கார் அறிமுகம்
டாடா ஹாரியர்
ராயல் என்பீல்டு இன்டர்செப்டர், கான்டினென்டல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!