மாலத்தீவு சுற்றுசூழல் அமைச்சர் மீது மர்ம நபர் சரமாரி கத்திக்குத்து: போலீஸ் விசாரணை
2022-08-24@ 15:04:32

மாலத்தீவு: மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரை வழிமறித்த ஒருவர் கத்தியால் தாக்க முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் தன்னுடைய கைகளை கற்றுக்கொண்டு தாக்குதலை தடுக்க முயன்றார். இருந்தபோதும் அவருடைய கழுத்து மற்றும் முகத்தில் குத்தி, அவருக்கு கத்திகுத்து ஏற்பட்டது.
வாகனத்தை விட்டுவிட்டு அமைச்சர் அலி தப்பியோடினார். தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடிக்க வந்தபோது அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தால் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மாலத்தீவு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை சுற்றி வளைத்து கைது செய்து இழுத்துச் சென்றனர். தாக்கியவர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்று மாலே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அலி சோலேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!