அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
2022-08-24@ 00:59:51

பள்ளிப்பட்டு: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சந்திரன் எம்எல்ஏ இலவச சைக்கிள்களை வழங்கினார்.
திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று 38 பிளஸ்டு மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கினார். அப்போது, எம்எல்ஏ சந்திரன் பேசுகையில், `கல்விக்காக தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்ப்படுத்தி வருகிறது.
பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பி தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. திருத்தணி தொகுதியில், கிராம பகுதிகளில் அரசு பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால், மாணவர்களுக்கு வசதிகள் ஏற்ப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு 10 பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் மேஜை, நாற்காலிகள் வழங்கப்படும்’என பேசினார். இந்நிகழ்ச்சியில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நற்குணன், கமலநாதன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பொன்னுதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை மறித்து நிறுத்தி மக்காச்சோளம் ருசித்த காட்டு யானையால் பரபரப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!