பாக்.கில் விழுந்த ஏவுகணை விமானப்படையின் 3 அதிகாரி டிஸ்மிஸ்
2022-08-24@ 00:13:32

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் பிரதான ஏவுகணையாக பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணைகளில் ஒன்று, கடந்த மார்ச் 9ம் தேதி தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்தது. இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது. இதில், ஏவுகணையை செலுத்துவதற்கான நிலையான இயக்க விதிமுறைகளை விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது.
இந்த தவறுக்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் ‘மிகவும் வருந்தத்தக்கது’ என்று மன்னிப்பு கோரியது. விசாரணையில், அவர்கள் 3 பேருமே இந்த தவறுக்கு பொறுப்பு என்று உறுதியானது. இதையடுத்து, இந்த 3 அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!