SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் சட்டவிரோதமாக 6 ஆண்டுகள் தங்கிய இலங்கையை சேர்ந்த பெண் மதபோதகர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

2022-08-24@ 00:01:09

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் குடியேற்றத்துறை அதிகாரி நிபின் ஜோசப், கடந்த 16ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த மனுவேல் மரிய செல்வம் (43) என்பவர் கடந்த 8.9.2016ல் இந்திய பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்தார். அதற்காக, அவர் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்த போது, அனைத்தும் போலி என தெரிந்தது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மனுவேல் மரிய செல்வம் இலங்கையில் இருந்து  போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்து, மத போதகரானார்.பிறகு அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 6 ஆண்டுகளாக குடியிருந்து வருவதாக போலி ஆதார் அட்டை, வங்கி கணக்குகள்  தொடங்கி அதன் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாஸ்போர்ட் நிறுவனத்தில் இந்திய குடியியுரிமை பெற்ற நபர் என்று பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இவர், இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும், இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததற்கான ஆவணங்களும் அதை உறுதி செய்தன. இதைதொடர்ந்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடி செய்த மத போதகராக உள்ள மனுவேல் மரிய செல்வத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்