ஆவடியில் தொடர் கைவரிசை; 3 கடைகளில் திருடிய மாணவன் சிக்கினான் மற்றொருவன் தலைமறைவு
2022-08-23@ 01:11:33

ஆவடி: பால்பூத் உள்பட 3 கடைகளை உடைத்து பணம் திருடிய பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து மற்றொருவனை தேடி வருகின்றனர். ஆவடி, காந்திநகர், அண்ணா தெருவில் சிலம்பரசன் (31) என்பவர் பால்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அதேபகுதியில் ஜாபர்கான் (38) என்பவரின் ஆவின் பால் பூத்தும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு கல்லாவில் இருந்த ரூ.1,500 ரொக்கம் திருடுபோயிருந்தது. மேலும், அதே பகுதியில் ராஜா (37) என்பவர் மளிகைக்கடையை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.8,500 மற்றும் ரேஷன், ஆதார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து பணம் கொள்ளை போயிருப்பது அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதேபோல், திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் கதவை மர்ம நபர்கள் உடைக்க முயன்றனர். கடைக்குள் அலாரம் கேட்டதால், சரஸ்வதி நகரில் வசிக்கும் கடை உரிமையாளர் சிவகுமார் (52) காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வந்தனர். அப்போது அயனாவரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் பிடிபட்டான். போலீசார் வருவதை கண்டதும் உடன் இருந்த 17 வயது சிறுவன் தப்பிவிட்டான். இதைத்தொடர்ந்து நேற்று 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவனது கூட்டாளி 17 வயது சிறுவன் கோயம்பேட்டில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படிப்பது தெரியவந்தது. அவனை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். 16 வயது சிறுவன் மீது வழிப்பறி, கடை உடைத்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவான பாலிடெக்னிக் மாணவனை தீவிரமாக தேடுகின்றனர்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!