இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு: எந்த நிமிடமும் கைது செய்யப்படலாம் என தகவல்
2022-08-22@ 15:53:18

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அந்நாட்டு அரசு வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யபடலாம் என்று கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான் நீதிபதி ஒருவரையும், காவல்துறையினரையும் மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று இரவு இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இஸ்லாமாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். சமீபகாலமாக பாக்கிஸ்தான் ராணுவம் குறித்தும், காவல்துறை, நீதித்துறை, அரசமைப்புகள் குறித்தும் இம்ரான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதனால் பாகிஸ்தானில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான் கான் பேச்சை நேரலை செய்ய கூடாது என ஆணையிடுள்ளது. அவரது பேச்சுக்கள் மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதால் தணிக்கை செய்தியாக ஒளிபரப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தன் மீதான வழக்கு பதிவுக்கு பதிலளித்த இம்ரான் கான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு தனது பேச்சை மக்களை கேட்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டிருக்கிறார். பாசிசவாதிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் குரலை உயர்த்த வேண்டும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அமெரிக்க வான்வௌியில் பறந்த சீன உளவு பலூன்: ராணுவம் தீவிர கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!