2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: நிதிஷ்குமாரை முன்னிறுத்த ராஷ்டிரிய ஜனதா தளம் விருப்பமா?
2022-08-22@ 10:41:46

டெல்லி: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஏற்று கொண்டால் பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமார் வலிமையான வேட்பளராக இருப்பார் என்று பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகாரில் பாரதிய ஜனதா உடன் உறவை துண்டித்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்து கொண்டிருக்கிறார். அவரது அரசில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி பீகாரில் எதிர் கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பது தேசிய அளவில் ஒற்றுமைக்கான முன்அறிவிப்பு என்றும் வர்ணித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படலாம் என்ற யுகத்திற்கு அவர்தான் பதில் அளிக்கவேண்டும் எனவும் தேஜஸ்வி கூறினார். ஆனால் எதிர் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால் நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான பிரதமர் வேட்பளராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். 50 ஆண்டுகளாக சமூக அரசியல் போராளியாக இருக்கும் நிதிஷ்குமார், ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் இடஒதுக்கீட்டு இயக்கங்களில் பங்கெடுத்தவர் 37 ஆண்டுகள் பரந்த நாடாளுமன்ற நிர்வாக அனுபவம் பெற்றவர் சகா அரசியல் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றிருப்பவர் என்றும் தேஜஸ்வி புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!