மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல் ஓபிஎஸ் மேற்கொள்வது தர்ம யுத்தம் அல்ல துரோக யுத்தம்
2022-08-22@ 06:47:46

எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நகர அதிமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்சின் நிலைப்பாட்டால் அதிமுக செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது. தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் பிரசாரத்திற்கு செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வரும் போது வழக்கம் போல மவுன யுத்தம் துவங்கினார்.
எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தை தொடங்குவார். மேலும் அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஆனால், அவர் மேற்கொள்வது தர்மயுத்தம் அல்ல துரோக யுத்தம். அவரது யுத்தங்கள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஒரு போதும் வெற்றி தராது. இருப்பினும் பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். விலாசத்தை தொலைத்தவர்கள் தான் ஓ.பி.எஸ் பக்கம் செல்கின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது என்றார்.
மேலும் செய்திகள்
பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!