முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் நடத்தும் பள்ளியின் குழந்தைக்கு பாலியல் தொல்லை: அரியானா போலீசார் விசாரணை
2022-08-21@ 16:43:09

ஜஜ்ஜர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்தப் பள்ளியின் விடுதிகளில் ஏராளமான குழந்தைகள் தங்கிப்படித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தையும், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்தவருமான ஒருவர், ஜஜ்ஜர் போலீஸ் எஸ்பி வாசிம் அக்ரமைச் சந்தித்து புகார் அளித்துள்ளார்.
அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளியில் தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!