அதிமுக அலுவலகத்தில் இருந்து பத்திரங்களை திருடியதாக நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்ள தயார்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி
2022-08-21@ 01:08:19

பெரியகுளம்: அதிமுக அலுவலகத்தில் பத்திரங்களை திருடி சென்றதாக நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறி உள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, நேற்று முன்தினம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றும் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓபிஎஸ்சை, கோவை மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் கோவை செல்வராஜ் அளித்த பேட்டி:
ஒரு வாரத்திற்குள் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து, அவரது தலைமையில் கட்சி வழி நடத்திச் செல்லப்படும். கட்சியில் சண்டைக்கும், குழப்பத்திற்கும் காரணம் ஜோக்கர் ஜெயக்குமார் தான். அவர் போன்றவர்கள் இனி கட்சியில் தலை தூக்க முடியாது. கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பத்திரங்களை திருடிச்சென்றதாக எடப்பாடி கூறுகிறார். லாக்கரிலோ, பீரோவிலோ இருந்த பத்திரங்களை காணவில்லை என்று கூறுவது அபத்தம். அதனை ஓபிஎஸ் தரப்பினர் திருடினார்கள் என்று நிரூபித்தால், நான் தற்கொலை செய்து கொள்ள தயார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!