போலி நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் வாங்கி மோசடி; ஊர்க்காவல்படை வீரர் கைது; தலைமறைவான மனைவிக்கு வலை
2022-08-21@ 00:57:41

சென்னை: மயிலாப்பூர் பஜார் பகுதியில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை ஜெயச்சந்திரன் (61) என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 18ம் தேதி இவரது கடைக்கு தனது கணவனுடன் சென்ற பெண், தன்னை ராணி என்ற பெயரில் அறிமுகம் செய்து, தன்னிடம் இருக்கும் பழைய நகைகளுக்கு மாறாக புதிய நகைகள் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரிடமிருந்த 8.5 சவரன் பழைய நகைகளை பெற்றுக்கொண்ட ஜெயசந்திரன், அதற்கு மாறாக 6 சவரன் புது நகைகளை அளித்துள்ளார். பழைய நகைக்குரிய தொகை போக மீதம் அளிக்க வேண்டிய தொகையை தான் ஒருவாரத்தில் அளிப்பதாக கூறி விட்டு அப்பெண் சென்றுள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண் வருவார் வருவார் என ஆகஸ்ட் 18 வரை காத்திருந்த கடையின் உரிமையாளர் ஜெயசந்திரன், அவர் வராததால் ஒரு கட்டத்திற்கு மேல் சந்தேகமடைந்தார்.
இதனையடுத்து அந்த பெண் அளித்த 8.5 சவரன் நகையை பரிசோதித்தபோது அவை கவரிங் என கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.சிசிடிவியில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் அவர்களின் வீட்டையடைந்த போலீசார் அவரது கணவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பெண், குன்றத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஊர்காவல் படையில் பணியாற்றும் மோகன்குமாரின் மனைவி ஈஸ்வரி (36) என தெரிய வந்தது. நகையை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ள ஊர்காவல் படை வீரரின் மனைவி குறித்து மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!