தமிழகத்தில் பாஜ தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபடுகிறது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
2022-08-20@ 01:26:20

மதுரை: தமிழகத்தில் பாஜ அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளது. அதில், இச்சம்பவத்திற்கு காரணமான அப்போதைய கலெக்டர், ஐஜி, டிஐஜி, எஸ்பி, உள்பட 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, விசாரணைக்குழு அறிக்கையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து, தற்போது ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் உள்ள விபரங்கள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சம்பவத்தில், ஒரு காவல்துறை ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. சிபிஐ முழு உண்மையை மூடி மறைத்துள்ளது. ஆலைக்கு சாதகமாக செயல்பட்டது போல் உள்ளது. இந்த அறிக்கையை தாக்கல் செய்த, விசாரணை அதிகாரிகளுக்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். பாஜ தமிழகத்தில் அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பாஜ எப்படிப்பட்ட அமைப்பு என்பதை முன்னாள் தலைவர் டாக்டர் சரவணனே கூறியுள்ளார். மதுரை விமான நிலைய பிரச்னையில் வழக்கு தொடுத்தால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Interview with K. Balakrishnan on the Anarchist trend in Tamil Nadu தமிழகத்தில் பாஜ அராஜக போக்கில் கே.பாலகிருஷ்ணன் பேட்டிமேலும் செய்திகள்
ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி
சொல்லிட்டாங்க...
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்த சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்பு
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, தகுதி நீக்க விவகாரம்; ‘மோடி’ குடும்பப் பெயர் வழக்கின் 4 கதாபாத்திரங்கள் யார்?.. பாஜக எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர், நீதிபதி வரை தகவல்கள்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது: சரத்குமார் கண்டனம்
ராகுல் காந்தி விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி