பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு
2022-08-19@ 16:06:15

கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தா மாநிலச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘கொல்கத்தா சென்றேன்; துணிச்சலான ஆளுமைமிக்க தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்தேன்.
இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான அவரது போராட்டத்தை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மம்தா - சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பானது, மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தது, முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்பிரமணியன் சுவாமி, மம்தா பானர்ஜியை டெல்லியில் சந்தித்தார். சமீபத்தில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறும் வழக்கமான விஷயங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டு, மோடியை கடுமையாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து இருந்தார். தொடர்ந்து அவர் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் மம்தாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!