SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடலூரில் ஆபத்தை உணராமல் மூடிய ரயில்வே கேட்டை கடக்கும் பொதுமக்கள்: விபத்து அபாயம்

2022-08-18@ 19:05:42

வடலூர்: வடலூரில் ஆபத்தை உணராமல் மூடிய ரயில்வே கேட்டை பொதுமக்கள் கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் வழியாக கடலூர்- விருத்தாசலம் ரயில்பாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் வரும்போது, வடலூரில் இருந்து நெய்வேலி சுரங்கத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கேட் மூடப்படுகிறது. இந்த வழியாக என்எல்சி தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் சுரங்கத்திற்கு செல்கின்றனர். மேலும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயிலுக்காக கேட் மூடப்படும்போது, சில வாகன ஓட்டிகள் சிறிது நேரம் காத்திருக்க பொறுமை இல்லாமல் தடுப்பு கம்பிகள் இல்லாத கேட் கீழாக டூவீலர்களை வளைத்து நுழைத்து ரயில் வரும் நேரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் கடந்து செல்கின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களும் கூட்டமாக கடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரயில்வே அதிகாரிகள் இந்த கேட் மூடப்படும்போது, யாரும் கீழே புகுந்து செல்ல முடியாதவாறு கேட்டை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்