SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!

2022-08-18@ 17:45:28

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வாஸ்கோ மற்றும் fite n fusta  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 'PONDY FOOD FETE 2022' என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் இடம்பெறவுள்ளன.

வார இறுதி நாட்கள் என்பதால் உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்துக் கொள்வார்கள் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் தெரிவித்திருக்கிறார். திருவிழாவில் புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் கலந்துக்கொண்டு விதவிதமான உணவுகளை விருந்து படைக்க உள்ளனர். மேலும் இசைக் கச்சேரி, மேஜிக் ஷோ, விளையாட்டு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்