SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!

2022-08-18@ 15:23:08

டெல்லி: நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் உட்பட மொத்தம் 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேறு சேனல்களில் தடை செய்யப்பட்ட மத ரீதியிலான யூ-டியூப் வீடியோக்கள், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சேனல்களில் உள்ள தேசவிரோத செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. முடக்கப்பட்ட யூ-டியூப் சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 85 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்