SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது

2022-08-18@ 15:11:20

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய சக மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ம் தேதி பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ‘’ரூட்தல’’ பிரச்னையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பினரும் ஜல்லி கற்கள்   மற்றும்  கத்திகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பச்சையப்பன்  கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்துவரும் திருவள்ளூர் அருகே தக்கோலம்  ராஜம்பேட்டை  கிராமத்தை சேர்ந்த  தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுசம்பந்தமாக திருவள்ளூர் இருப்புப்பாதை  காவல் நிலையம் ஆய்வாளர் விஜயலட்சுமி, எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஆகியோர்  மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவர் தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதன்படி வழக்கு பதிவு செய்து   தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவரும் மாணவர் கொடுத்த தகவல்படி கடம்பத்தூரை சேர்ந்த மாணவர்கள் ராகுல் (19), ரோகித் (19), திருவாலங்காடு பகுதியை சேர்ந்த ராகுல் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மாநில கல்லூரி மாணவர்களுடன் ரயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்