நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்..!
2022-08-18@ 14:51:09

சென்னை: தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான திரு. நெல்லை கண்ணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரைப் பற்றி திரு. நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை எவரும் மறந்திட இயலாது.
இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. மிகுந்த நகைச்சுவையோடு பேசக் கூடியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இளமைப் பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி பல பொறுப்புகளை வகித்தவர். தமிழகம் அறிந்த திரு. நெல்லை கண்ணன் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!