SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்

2022-08-18@ 01:06:46

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பையொட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். ‘‘கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எனது அனுமதி இல்லாமல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்க கூடாது” என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பில், ‘‘அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி) ஆகியோர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அதனால் கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தீர்ப்பு வருவதற்கு முன்பே, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் வைத்திலிங்கம் எம்எல்ஏ, மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

 தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததையொட்டி, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், நடனம் ஆடியும் கொண்டாடினர். அதேபோன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.அதேநேரம் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று காலை 9 மணி முதலே திரண்டு இருந்தனர். ஆனால் காலை 11.30 மணிக்கு தீர்ப்பு எடப்பாடி அணியினருக்கு சாதகமாக வராததால் சோகத்தில் மூழ்கினர். எப்படியும் தங்களுக்கு சாதகமாக வரும் என்று, பட்டாசு, இனிப்புகளுடன் தயார் நிலையில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது கிடையாது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

எடப்பாடி ஆலோசனை
நீதிமன்ற தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சாதகமாக வந்துள்ளதால், தற்போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவே அதிமுக கட்சியில் தொடர்வார். ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். கட்சி நிர்வாகிகளை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஜூன் 23ம் தேதிக்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கியது எதுவும் செல்லாது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். ஆனாலும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்