SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடிக்கு பின்னடைவு

2022-08-18@ 00:07:27

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு காரணம் இரட்டைத் தலைமையே என முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்டோர் ஒரு கருத்தை முன்வைத்தனர். இதற்கு ஒரே வழியாக, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமையில் செயல்படுவது, ஓபிஎஸ்சை கட்சியிலிருந்தே ஓரங்கட்டுவது என ஒரு தரப்பினர் முடிவெடுத்தனர்.கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்தனர்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி விட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க  திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாயின. இதையறித்த ஓபிஎஸ் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அன்று நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. பொதுக்குழுவில் தயாரான தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன. கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஓபிஎஸ். பின்னர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ்  தரப்பினர், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடினர். இருதரப்பில் இருந்தும் மாறி, மாறி ஒருவரையொருவர் கட்சியிலிருந்து  நீக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறின. தொண்டர்களும் யார் தலைமையில் செயல்படுவது என புரியாமல் குழம்பி நின்றனர்.இந்த சூழலில்தான் எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓபிஎஸ். இந்த வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பில் பரபரப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

*  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லாது.
* பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே கூட்ட வேண்டும்.
* பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
* ஜூன் 23ம் தேதிக்கு முன்பு கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அதே நிலைதான் நீடிக்க வேண்டும். - இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பு எடப்பாடி அன் கோவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கின்றனர். மற்ற நிர்வாகிகளின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்சியில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், நீக்கம், சேர்த்தல் என எதுவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே முடிவெடுக்க வேண்டும். முட்டல் - மோதல் என ஆகி விட்ட இருதரப்பு, இனி எப்படி இணைந்து செயல்படப் போகின்றனர், அதிமுக கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படியிருக்கும், யார் தலைமையில் தொண்டர்கள் செயல்படப் போகின்றனர் என்பதற்கெல்லாம் காலம்தான் இனி பதில் சொல்லவேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்