SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

2 ரயில்கள் மோதி 60 பேர் காயம்; மகாராஷ்டிராவில் பரபரப்பு

2022-08-17@ 15:18:55

கோண்டியா: கோண்டியாவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில், ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் ரயிலின் எஸ்-3 பெட்டிகள் தடம் புரண்டதால் அதில் இருந்த பயணிகள் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கோண்டியா பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோண்டியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்