SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொலீரோ பிக்அப் வேன்

2022-08-17@ 12:40:37

மகிந்திரா நிறுவனம் புதிய பொலிரோ மேக்ஸ் பிக் அப் வேனை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.68 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெட் லாம்ப், முன்புற கிரில், பம்பர் போன்றவை மேம்படுத்தப்பட்ட தோற்றத்தை கொண்டுள்ளன. இதில் உள்ள ஐமேக்ஸ் டெலிமேட்டிக்ஸ், இயக்க செலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டெலிமேட்டிக் சிஸ்டத்தை மொபைல் ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிடல், நேவிகேஷன், டிராக்கிங், ஜியோ பென்சிங் உட்பட 30 வகையான ஸ்மார்ட் அம்சங்கள் இதில் உள்ளன. இதில் உள்ள எம்2டிஐ இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. 1.3 டன் சரக்குகளை ஏற்றிக் செல்லலாம். ஒரு லிட்டருக்கு 17 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்