இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு
2022-08-17@ 00:03:27

அகமதாபாத்: அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தியில் அமுல் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பால் விலையில் 4 சதவீதம், அதாவது லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்படுகிறது.
இந்த விலை ஏற்றம் ஆகஸ்ட் 17ம் (இன்று) தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி, அமுல் கோல்டு 500 மிலி ரூ.31, அமுல் தாசா 500 மிலி ரூ.25, அமுல் சக்தி 500 மிலி ரூ.28க்கும் விற்பனையாகும். குஜராத்தில் உள்ள அகமதாபாத், சவுராஷ்டிரா மண்டலங்கள், டெல்லி என்சிஆர், மேற்கு வங்கம், மும்பை மற்றும் அமுல் விற்பனையாகும் அனைத்து பகுதிகளிலும் இதே விலை உயர்வு அமல்படுத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. பால் பொருள் உற்பத்திக்கான ஒட்டு மொத்த இயக்கச் செலவு, கால்நடை தீவன செலவு 20 சதவீதம் அதிகரித்ததால், விலை உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Tags:
Amal Amul milk price increased by Rs.2 per liter from today இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வுமேலும் செய்திகள்
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!
மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது: பெங்களூரு பாஜக அலுவலகம் முன்பு போராட்டம்
புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும்: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!