SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்

2022-08-16@ 18:28:58

நியூயார்க்: இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மூவர்ண கொடி  ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.  இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று நாட்டின் 76வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள், இந்திய வம்சாவளிகளும் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால், இந்திய தேசிய கொடியை ஏற்றினார். நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான தேவி பிரசாத் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடகர் சங்கர் மகாதேவன் நாட்டுப்பற்று பாடலை பாடினார். அவருடன் சேர்ந்து இந்திய வம்சாவளியினரும் இசைக்கேற்ப அசைந்து ஆடியபடி, பாடலை பாடினர். நிகழ்ச்சியில் தேவி பிரசாத், இந்திய தேசிய கீதம் பாடினார். மூவர்ண கொடியை ஏற்றும்போது, அதனை காண நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தில் இந்திய தேசிய கொடியானது டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்