தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்-மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல்
2022-08-16@ 14:38:01

ஏலகிரி : தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால் மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து ஏலகிரி மலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. எழில் மிகுந்த ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் தமிழ் புலவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏலகிரி மலை நான்கு மலை தொடர்களால் சூழப்பட்டு 14 கிராமங்களை கொண்ட தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
தற்போது, தொடர் விடுமுறையின் எதிரொலியால் ஏலகிரி மலையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் இங்கு படகு, இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மங்கலம் சுவாமிமலை போன்றவையும் மற்றும் இயற்கை சூழல் குளிர்ச்சியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதிக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் மலைப்பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து விளையாட்டு தலங்களிலும், மிகவும் அருகில் உள்ள இயற்கை பூங்காவிலும், படகு இல்லத்திலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.இதனால் அனைத்து தனியார் விடுதிகளிலும் ஹவுஸ்புல் ஆனதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தவித்து வந்தனர். மற்றும் பொது இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!