SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!

2022-08-16@ 12:20:16

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார்.

முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி பிரசாத்தும் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதன்படி, நிதிஷ்குமார் அமைச்சரவையில் தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பீகாரில் 36 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்பட அனுமதி உண்டு. காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கான இடங்கள் இன்னும் சில நாட்களில் நிரப்பப்பட உள்ளன. முதலமைச்சர், துணை முதல்வர் சேர்த்து 33 பேர் பதவியில் இருப்பார்கள்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்